அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆட்சி அமைக்க எதிராக சட்டபஞ்சாயத்து இயக்கம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
சசிகலாவிற்கு பதவிபிரமாணம் செய்து வைப்பது தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்ககூடாது என சட்டபஞ்சாயத்து இயக்கம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
இதே சமயம் சசிகலா ஆட்சி அமைக்க ஆதரவாக வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்சநீதிமன்றத்தில் அதிரடி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
பெரும்பான்னை உறுப்பினர்கள் ஆதரவுடன் சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள எம்.எல்.சர்மா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது,
சசிகலாவை ஆட்சி அமைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் உடனடியாக அழைக்க வேண்டும் என உத்திரவிடக்கோரி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சசிகலா ஆட்சி அமைக்க ஆளுநர் காலம் தாழ்த்தாமல் அழைக்க வேண்டும். ஆளுநர் காலதாமதம் செய்வதற்கான காரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தவிட வேண்டும் எனவும் அவர் பொதுநல மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சசிகலாவிற்கு பதவிபிரமாணம் செய்து வைப்பது தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்ககூடாது என சட்டபஞ்சாயத்து இயக்கம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.