Loading...
தமிழ் கைதிகளின் பெயர் பட்டியலை வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிரிப்பு அரசியல் காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
அண்மையில் பிரித்தானியாவில் இடம்பெற்ற புலம்பெயர் தமிழர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் கைதிகளின் பட்டியலை கோரியிருந்தார்.
Loading...
இந்நிலையில் தனது டுவிட்டர் பதிவில் அதனை மேற்கோளிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதற்கு பதிலாக 1978 முதல் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்களின் விபரத்தை சிறைசாலை ஆணையாளரிடம் கோர முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Loading...