Loading...
ரஷ்யாவின் புதிய அணிதிரட்டலுக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் தொடர்வதால், நூற்றுக்கணக்கான மக்கள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமையன்று 32 வெவ்வேறு நகரங்களில் 724 பேர் செய்யப்பட்டுள்ளதாக சுதந்திர உரிமைக் குழு தெரிவித்துள்ளது.
உக்ரைனிற்கு எதிராக 300,000 பேரை அணிதிரட்டும் திட்டத்தை ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்ததிலிருந்து நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்துள்ளன.
Loading...
அங்கீகரிக்கப்படாத பேரணிகள் ரஷ்யாவில் தடைசெய்யப்பட்டுள்ள போதும் பொதுமக்களை இராணுவத்தில் சேர்ப்பதற்கான புடினின் அறிவிப்பு போராட்டங்களை தூண்டியுள்ளது.
இந்நிலையில் தங்களில் சிலரை ஆட்சேர்ப்பு மையங்களுக்குச் செல்ல பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டதாக கைது செய்யப்பட்டவர்களில் சிலர் தெரிவித்துள்ளனர்.
Loading...