இந்த காலகட்டத்தில் தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்கள் ஏராளம்.
வீடு, வேலையில் டென்ஷன், ஓயாத உடலுழைப்பு, நோய்கள் என பல்வேறு மன அழுத்த பிரச்சனைக்கு ஆளாவதால் தூக்கம் இல்லாமல் தவிக்கின்றோம்.
இதற்கு வெறும் ஒரே ஒரு நிமிடத்தில் தீர்வு உண்டு, உங்களுக்கு தெரியுமா?
டாக்டர் ஆண்ட்ரூ வீல் என்ற ஆரோக்கிய பயிற்சியாளர் 60 நொடிகளில் ஆழ்ந்த தூக்கம் ஏற்படுவதற்கு ஒரு அருமையான வழியை கூறுகிறார்.
தூக்கமின்மை பிரச்சனையை போக்க என்ன செய்ய வேண்டும்?
தூக்கமின்மை பிரச்சனையை போக்குவதற்கு, ஆண்ட்ரூ வீல் என்பவர் 4-7-8 என்ற ஒரு சுவாச பயிற்சி முறையை அறிமுகப்படுத்தி உள்ளார்.
4-7-8 என்ற சுவாச பயிற்சியில் 4 வினாடிகள் மூச்சை சுவாசித்து, அதை 7 வினாடிகள் அப்படியே நிறுத்திக்கொண்டு, வாயின் வழியாக 8 வினாடிகளில் வெளியேற்ற வேண்டும்.
இவ்வாறு இரவில் தூங்குவதற்கு முன் செய்து வந்தால் 1 நிமிடத்தில் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும் என்று கூறுகிறார்.
இதனை செய்வதால் இதய துடிப்பு சீராகி, நமது மூளையில் இருக்கும் அழுத்தம் வெளியேற்றப்பட்டு நிம்மதியான உறக்கம் ஏற்படுகிறது.
குறிப்பு
இது போன்ற சுவாசப் பயிற்சி மற்றும் தியானத்தை தொடர்ந்து செய்து வந்தால், தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.