- இந்த கீரை தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டது.
- பிரசவித்த பெண்களுக்கு கொடுக்கப்படும் ஒரே கீரை இதுதான்
தாய்க்கு அருவிபோல் பால்சுரக்க.. அம்மான் பச்சரிசி கீரை உதவுகிறது. இதற்கு ‘சித்திரப் பாலாடை’ என இன்னொரு பெயரும் உண்டு.
துவர்ப்பு கலந்த இனிப்புச் சுவை கொண்ட இந்த கீரையின் முழுத் தாவரமும் மருந்தாக பயன்படக்கூடியது. சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரு வகைகளும் உண்டு. இதன் விதைகள் தோற்றத்திலும், சுவையிலும் அரிசிகுருணை போலிருப்பதால் பச்சரிசி கீரை என்றும் அம்மான் பச்சரிசி என்றும் அழைக்கப்படுகிறது.
இதன் இலைகள், பூக்கள், வேர், விதை என அனைத்து பாகமும் மருத்துவக்குணம் கொண்டது. இது ஒரு கீரை வகையை சேர்ந்தது. பிரசவித்த பெண்களுக்கு கொடுக்கப்படும் ஒரே கீரை இதுதான். காரணம் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டது. மேலும், எந்த தொற்றுக் கிருமிகளையும் அண்ட விடாது.
இதன் இலைகளை நீரில் கலந்து மிதமான தீயில் கொதிக்கவைத்து அதனை அருந்த, கொடிய தொற்றுநோய்களும் விலகும். இதன் பூக்களை மைய அரைத்து அல்லது பூக்களை நேரடியாக பசும் பாலுடன் சேர்த்து காய்ச்சிபருகிவர தாய்ப்பால் நன்கு சுரக்கும். இதனை காலை மாலை என இரண்டு வேளை பனங்கற்கண்டு சேர்த்து அருந்துவதால் உடலுக்கு நல்ல பலமும் தெம்பும் கிடைக்கும்.
இந்த அம்மான் பச்சரிசி இலைகளை நன்கு மைய அரைத்து மோருடன் கலந்து குடித்து வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்த் தொந்தரவுகள், வெள்ளைப்படுதல் நீங்கும்.
அம்மான் பச்சரிசி ஆணிக் கால் நோய்க்கு நல்ல மருந்தாகிறது. மேலும், பாத வெடிப்பு, உதட்டில் ஏற்படும் வெடிப்புகள், நிறமாற்றத்திற்கும் இதனை பயன்படுத்த சிறந்த நிவாரணம் கிடைக்கும். வாய்ப்புண்கள் மறையும்.
காலையில் வெதுவெதுப்பான நீர் அரை டம்ளர் எடுத்து அரை டீஸ்பூன் அளவு கலந்து குடித்துவந்தால் துர்நாற்றத்துடன் கூடிய வெள்ளைப்படுதல் குணமாகும்.
இதனுடன் தூதுவளை இலைகளையும் சேர்த்து துவையல் செய்து உண்ண உடல் பலம் பெரும்.பிறந்த குழந்தையை தாய்ப்பால் கொடுத்து தேற்றும் இந்த அம்மான் பச்சரிசி அனைவரின் உடல் ஆரோக்கியத்திற்கும் உத்தரவாதமாக உள்ளது.