- ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 14 ப்ரோ சீரிசில் டைனமிக் ஐலேண்ட் எனும் பெயரில் புது அம்சத்தை அறிமுகம் செய்தது.
- ஆப்பிள் டைனமிக் ஐலேண்ட் அம்சம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் கிடைக்கத் துவங்கி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களின் நாட்ச் பகுதியில் மிகவும் வித்தியாசமான அம்சத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் டைனமிக் ஐலேண்ட் பெயரில் புது விதமான நோட்டிபிகேஷன் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த அம்சம் பல்வேறு விதமான அலெர்ட்கள், நோட்டிபிகேஷன் மற்றும் உரையாடல்களை வழங்குகிறது.
புதிய ஐபோன் மாடல்களில் இந்த அம்சம் வழங்கப்பட்டு இருப்பதை அடுத்து ஆண்ட்ராய்டு பயனர்கள் இதுபோன்ற அம்சம் இல்லையே என வருத்தம் கொள்ள வேண்டாம். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் டைனமிக் ஐலேண்ட் போன்ற அம்சம் கொண்டு வர மிக எளிமையான வழிமுறை உள்ளது.
இதற்கு பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போனில் டைனமிக்-ஸ்பாட் (dynamicspot) எனும் செயலியை இன்ஸ்டால் செய்தால் போதுமானது. ஜாவோமோ உருவாக்கி இருக்கும் இந்த செயலி ஆப்பிள் டைனமிக் ஐலேண்ட் போன்றே செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த செயலி தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாகவே கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு சாதனத்தில் உள்ள நாட்ச் அளவுக்கு ஏற்ப ஐலேண்ட் அளவு மற்றும் எங்கு தோன்ற வேண்டும் என்ற விவரங்களை செட் செய்ய டைனமிக்-ஸ்பாட் வழி செய்கிறது. இத்துடன் செயலியை பல விதங்களில் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் எது போன்ற நோட்டிபிகேஷன்கள் திரையில் தோன்ற வேண்டும் என்பதை தீர்மானிக்க செய்கிறது.
இந்த செயலியின் இலவச பதிப்பில் அம்சங்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. அதிக அம்சங்கள் நிறைந்த செயலியை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் விலை 4.99 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.