Loading...
பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 22ஆம் திகதி அதிகாலை பாரிஸின் புறநகர் பகுதியான லாக்னோரில் இடம்பெற்றதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாரிஸில் கொலை
இந்தத் தாக்குதலில் 24 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததுடன் 30 வயதான மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Loading...
இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளது.
பழிவாங்கும் நடவடிக்கை
இந்த கொலைச்சம்பவம் பழிவாங்கும் நோக்கத்தில் இடம்பெற்றிருக்கக் கூடும் என பாரிஸ் குற்றவியல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...