Loading...
பெண்களை வீட்டின் மகாலெஷ்மி என்று போற்றுவார்கள். இதற்கு பல காரணங்கள் உண்டு என்பது நம் அனைவருக்கும் தெரியும் அல்லவா?
அந்த வகையில், பெண்கள் ஒருசில செயல்களை செய்யக் கூடாது என்று தர்மசாஸ்திரம் கூறுவதை தெரிந்துக் கொள்வோம்.
Loading...
பெண்களுக்கு தர்மசாஸ்திரம் கூறுவது என்ன?
- சுமங்கலி பெண்கள் குங்குமம் இல்லாமல் இருக்கக் கூடாது.
- பெண்கள் தங்களின் இரண்டு கைகளாலும் தலையை சொறியக் கூடாது.
- பெண்கள் அடிக்கடி வீட்டில் இருக்கும் போது அழுகக் கூடாது.
- உணவு பரிமாறும் போது ஒரு இலையில் பரிமாறியதில் இருந்து, அதை எடுத்து அடுத்த இலைக்கு பரிமாறக் கூடாது.
- வீட்டிற்கு சுமங்கலி பெண்கள் வந்தால், அவர்களுக்கு வெற்றிலை பாக்கு, பழம் கொடுத்து உபசரிக்க வேண்டும்.
- கர்ப்பிணி பெண்கள் கோவிலுக்கு செல்லும் போது, தேங்காயை உடைக்கக் கூடாது.
- பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது எலுமிச்சை பழத்தை அறுத்து விளக்கு ஏற்றக் கூடாது.
- திருஷ்டிக் கழிக்கும் போது பெண்கள் பூசணிக்காயை உடைக்கக் கூடாது.
- பெண்கள் அதிகாலையில் எழுந்து வீட்டின் முற்றத்தில் சாணம் தெளித்து கோலம் இடுவது மிகவும் அவசியம்.
- வீட்டில் ஒரு பொருள் இல்லாமல் இருந்தால் அதை கணவனிடம் கூறும் போது, இல்லை என்ற வார்த்தையை கூறாமல், அந்த பொருள் வேண்டும் என்று கூறுவது சிறந்தது.
குறிப்பு
தர்மசாஸ்திரம், பெண்களுக்கு என்று கூறும் இந்த அனைத்து செயல் முறைகளைக் கடைபிடித்து வந்தால், வீட்டில் உள்ள அனைத்து கவலை மற்றும் கஷ்டங்கள் விலகி, நமது வீட்டில் செல்வம், மகிழ்ச்சிகளே நிறைந்து இருக்கும்.
Loading...