Loading...
ஐதராபாத் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதல் இன்னிங்சில் 204 ரன்னும், 2-வது இன்னிங்சில் 38 ரன்னும் எடுத்தார். இந்த டெஸ்டில் மொத்தம் அவர் 242 ரன்கள் எடுத்தார். கேப்டன் பதவியில் விராட் கோலி 6-வது முறையாக ஒரு டெஸ்டில் 200 ரன்னுக்கு மேல் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.
Loading...
மற்ற இந்திய கேப்டன்களில் கவாஸ்கர் 2 முறை 200 ரன்னுக்கு மேல் எடுத்து உள்ளார். ஒரு டெஸ்டில் அதிக ரன் எடுத்த இந்திய கேப்டன்களில் கவாஸ்கரே முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 1978-79-ம் ஆண்டில் வெஸ்ட் இன்டீசுக்கு எதிராக கேப்டன் பதவியில் 289 ரன் (முதல் இன்னிங்சில் 107 +2-வது இன்னிங்சில் 182 ரன்) குவித்தார்.
Loading...