Loading...
ஆட்சியாளர்களுக்கே அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் தேவை என்பதால் அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் சட்டம் கொண்டுவரப்பட்டதாக முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
Loading...
நாட்டில் யுத்தம் இல்லை. பயங்கரவாதமில்லை. மக்களின் வாழ்வுக்கு எந்த இடையூறும் இல்லை. எனினும் ஆட்சியாளர்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்
இதேவேளை பயத்தில் வாழும் ஆட்சியாளர்களுக்கே அதி உயர் பாதுகாப்பு வலயங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர்களுக்கு செல்லும் இடங்களில் எல்லாம் பாதுகாப்பு தேவைப்படும் என்றும் சரத் பொன்சேகா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Loading...