அரச வாகனங்களை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவின் விளக்கமறியல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விமல் வீரவங்ச பிணை கோரி தாக்கல் செய்திருந்த மனுவிற்கு எதிர்ப்புகள் இருக்குமாயின் அவற்றை எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்போது நிதிமோசடி விசாரணை பிரிவு உட்பட 6 பிரதிவாதிகளும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகி உள்ளனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாள் முதல் விமல் வீரவன்ச புத்தகம் எழுதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.