அன்னம், மயில், புறாக்கள் மூலமாக காதல் தூது அனுப்பியபோது அன்றைய காதலர்களுக்கு கிடைத்த அதே சிலிர்ப்பும், அதே சந்தோஷமும் இன்று இணையம் வழியாக காதலை சொல்லும்போதும் கிடைக்கிறது.
ஸ்மார்ட்போன்களை சகஜமாக கையாளுகிற இளையதலைமுறை இது. சமூகவலைதளம், இணையம் என அவர்கள் வேகமாக சுழன்று கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட காலகட்டத்தில் புதுமையாய் அதே சமயத்தில் அழகாய் காதலை சொல்ல நினைப்பவர்களுக்கு மத்தியில் பிரபலமாகியிருக்கிறது யூடியூப் புரபோஸல்.
தன் காதலன்/ காதலிக்காக தானே குறும்படங்களை நடித்து யூடியூப் தளத்தில் பதிவிடுவது, துணையின் படங்களை வைத்து காதல் பாடல்களை கொண்டு வீடியோ தயாரித்து பதிவு செய்வது, அவர்களுக்காக பாடல்களை எழுதி சொந்தக்குரலில் பாடி காதலை வெளிப்படுத்துவது என யூடியூப் தளத்தையே அமர்க்களப்படுத்திவிடுகின்றனர்.
இணையம் தொடர்புடையது என்பதால் காதலித்துக்கொண்டிருப்பவர்கள், காதலிக்கு/ காதலனுக்கு கொடுக்கிற இன்ப அதிர்ச்சியாக இந்த ஐடியாவை பயன்படுத்தலாம்.
முதலில் உங்கள் துணைக்கு மட்டும் ஷேர் செய்துவிட்டு அவரின் சம்மதத்துடன் மற்றவர்கள் பார்க்கும்படி ஆப்ஷன்களை மாற்றுவதே நன்மை.