இட்லி, சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
மட்டன் குழம்பிற்கு மாற்றாக இந்த ரெசிபியை செய்யலாம்.
தேவையான பொருட்கள்
மட்டன் எலும்பு – 200 கிராம்,
துவரம்பருப்பு – 50 கிராம்,
கடலை பருப்பு – 50 கிராம்,
கத்தரிக்காய் – 2,
வாழைக்காய் – 1/2 காய்,
புளி – 10 கிராம்,
மாங்காய் – 1/2,
இஞ்சி, பூண்டு விழுது – 50 கிராம்,
பச்சை மிளகாய் – 4,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
பட்டை – 5 கிராம்,
பிரிஞ்சி இலை – 2,
உப்பு – தேவைக்கு.
செய்முறை
துவரம் பருப்பு, கடலைப்பருப்பை நன்கு கழுவி, ஊற வைக்கவும்.
வாழைக்காய், கத்தரிக்காய், மாங்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு குக்கரில் இரண்டு பருப்புகள், மட்டன் எலும்பு, சிறிது கொழுப்பு, கத்தரிக்காய், வாழைக்காய், மாங்காய், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேகவைக்கவும்.
தேவைப்பட்டால் புளியை கரைத்து அதனை பருப்பு வெந்தவுடன் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கலாம்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, பிரிஞ்சி இலை தாளித்து இதனுடன் சேர்த்து கலந்து பரிமாறவும்.