சசிகலா அம்மாவின் சமாதிக்கு சென்றபோது ஒரு ஈர்ப்பு சக்தி தன்னை அங்கிருந்து போக விடாமல், காலை பிடித்து இழுத்ததாக திகில் தகவல் ஒன்றை சசிகலா தெரிவித்துள்ளார்.
முதல்வர் பன்னீர் செல்வத்தால் ஆபத்து இருப்பதாக கூறி, கூவத்தூர் ஆடம்பர விடுதியில் வைக்கப்பட்டுள்ள தமிழக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசிய சசிகலா, பொதுச் செயலாளராக தெரிவுச் செய்யப்பட்ட பிறகு, தான் அம்மா சமாதிக்கு சென்று வணங்கி விட்டு திரும்ப முயன்றபோது, அந்த இடத்தை விட்டு தன்னால் வெளியேற முடியாதவாறு ஒரு ஈர்ப்பு சக்தி தன்னை இழுத்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த சம்பவத்தினுடாக தான் கட்சியில் இருப்பதை அம்மா விரும்புகிறார். எனும் வகையிலான தகவல்களை, கூவத்தூர் ஆடம்பர விடுதியில் வைக்கப்பட்டுள்ள தமிழக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில், சசிகலா பேசியுள்ளதாக தமிழக ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
இது குறித்து வெளியான வீடியோ கீழ் வருமாறு,