Loading...
அரசாங்கத்திற்கு நட்டத்தினை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட இருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Loading...
குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர், அமைச்சர் உள்ளிட்ட ஏனைய பிரதிவாதிகளையும் பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், இந்த வழக்கை நவம்பர் 03ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Loading...