விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும்.
அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும்.
முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.
ஓம் அகர முதல்வா போற்றி!
ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!
ஓம் ஆனை முகத்தோய் போற்றி!
ஓம் இந்திரன் இளம்பிறைபோற்றி!
ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!
ஓம் உமையவள் மைந்தா போற்றி!
ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!
ஓம் எருக்கினில் இருப்பாய்போற்றி!
ஓம் ஐங்கரனே போற்றி!
ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி!
ஓம் கற்பக களிறே போற்றி!
ஓம் பேழை வயிற்றோய் போற்றி!
ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!
ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!
ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!
ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!
இன்று மூன்றாம் நாள் போற்றி பாடல் பாடி…நவராத்திரியை கொண்டாடுவோம்!
ஓம் அறிவினுக்கறிவே போற்றி
ஓம் ஞானதீபமே போற்றி
ஓம் அருமறைப் பொருளே போற்றி
ஓம் ஆதிமூலமாய் நின்றவளே போற்றி
ஓம் புகழ்தரும் புண்ணியளே போற்றி
ஓம் நற்பாகின் சுவையே போற்றி
ஓம் நல்வினை நிகழ்த்துவோய்போற்றி
ஓம் பரமனின் சக்தியே போற்றி
ஓம் பாபங்கள் களைவாய் போற்றி
ஓம் அன்பெனும் முகத்தவளே போற்றி
ஓம் அகிலத்தின் காப்பே போற்றி
ஓம் செம்மேனியளே போற்றி
ஓம் செபத்தின் விளக்கமே போற்றி
ஓம் தானியந் தருவாய் போற்றி
ஓம் கல்யாணியம்மையே போற்றி