பொதுவாக எமக்கு சரும பிரச்சினைகள் ஏற்படும் போது இரசாயனப் பொருட்களை பயன்படுத்துவோம். அந்த மாதிரியான பொருட்கள் தற்காலிகமாக தீர்வை மட்டுமே கொடுக்கும், அது ஒரு போதும் நிரந்தர தீர்வாகாது.
சரும பிரச்சினைகளுக்கு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து நிரந்தர திர்வை பெற்றுக் கொள்ள முடியும்.
அந்த வகையில் ஆலிவ் எண்ணெய் வைத்து சருமத்தில் இருக்கும் கருமை மற்றும் முகம் பளப்பளப்பின்மை போன்ற பிரச்சினைகளுக்கு என்ன செய்யலாம் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
தேவையானவை
எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் – 1 தேக்கரண்டி
மென்மையான பருத்தி துணி
வெந்நீர்- தேவைகேற்ப
செய்முறை
நம்முடைய விரல்களின் நுனியைப் பயன்படுத்தி, முகத்தில் ஆலிவ் எண்ணெய்யால் மசாஜ் செய்து கொள்ளுங்கள்.
மூக்கு, கன்னங்கள் மற்றும் நெற்றியில் சற்று அழுத்தி வட்டமாக தேய்த்துக் கொள்ளுங்கள். பின்பு பருத்தி துணியை வெந்நீரில் நனைத்து, அறை வெப்பநிலைக்கு வரும் வரை துணியை முகத்தில் அழுத்திப் பிடிக்கவும்.
துணியை எடுத்த பின்பு மீண்டும் மிதமான சூடுள்ள நீரில் நனைத்து, எண்ணெய்யை அகற்றுவது போல் அழுத்தி மசாஜ் செய்யவும்.
அதன்பிறகு, டிஷ்யூ பேப்பரால் முகத்தைத் துடைத்து உலர வைக்கவும். இவ்வாறு தினமும் காலை மற்றும் இரவு செய்து வந்தால் ஒரு வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும்.
சருமம் பளபளப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். எண்ணெய்ப்பசை கொண்ட சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தி குறையும். கருமை நிறம் மாற்றமடைய தொடங்கும்.