தற்போதைய மோசமான வாழ்க்கை முறையால், இளமையிலேயே சருமத்தில் சுருக்கங்கள் வருகிறது. இதனால் விரைவிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெற நேரிடுகிறது. சருமத்தில் இருக்கும் சுருக்கங்களைப் போக்க கடைகளில் ஏராளமான க்ரீம்கள் விற்கப்படலாம். ஆனால், அந்த க்ரீம்களில் கெமிக்கல்கள் இருப்பதால், அது தற்காலிகமாக பலனைத் தருமே தவிர, மற்றொரு பக்கம் அந்த க்ரீம்கள் சரும செல்களை பாதித்துக் கொண்டிருக்கும்.
அதுவே இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும பிரச்சனைகள் நீங்குவதோடு, சரும செல்களும் ஆரோக்கியமாக இருக்கும். இங்கு சரும சுருக்கங்களை மாயமாய் மறையச் செய்யும் அற்புத மாஸ்க் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
பால் பவுடர் – 4 டேபிள் ஸ்பூன்
தேன் – 2 டேபிள் ஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் – 2 டேபிள் ஸ்பூன்
ஒரு பௌலில் பால் பவுடர், தேன், வெதுவெதுப்பான நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவ வேண்டும். பின் ஒரு சிறிய துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து, நீரைப் பிழிந்துவிட்டு, அந்த துணியை முகத்தின் மேல் வைத்து, 10 நிமிடம் கழித்து, அதே துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.
இந்த மாஸ்க்கை வாரத்திற்கு ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது. முக்கியமாக இந்த மாஸ்க்கை ஒருமுறை பயன்படுத்தியதுமே ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
இந்த மாஸ்க் சரும செல்களுக்கு ஊட்டமளிப்பதோடு, வறட்சியடையாமல் பாதுகாத்து, சரும சுருக்கங்களைப் போக்கும். மேலும் இந்த மாஸ்க் சருமத்தில் உள்ள கருமையையும் போக்கி, சருமத்தை பொலிவோடும் பிரகாசமாகவும் வெளிக்காட்டும்.
இளமையிலேயே சருமத்தில் சுருக்கங்கள் வருவதற்கு, சரும செல்களின் வறட்சியும் ஓர் காரணம். எனவே தினமும் போதிய அளவில் நீரைப் பருகுவதோடு, பழங்களை சாப்பிடுவதோடு, பழச்சாறுகளையும் அவ்வப்போது பருக வேண்டும்.