Loading...
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இன்று காலை முதலே சசிகலாவின் ஆதரவாளர்கள் 1000க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இன்று மீண்டும் எம்.எல்.ஏக்களை சந்திப்பதற்காக கூவத்தூர் சென்றிருக்கிறார். இந்நிலையில், முதல்வர் பன்னீர்செல்வம், கடந்த ஒரு வாரத்திற்கு பிறகு இன்று தலைமை செயலகம் சென்றார்.
Loading...
இதனையடுத்து பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கருதிய சசிகலா ஆதரவாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1000க்கும் மேற்பட்டோர் குவிந்துள்ளதால் ராயப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading...