இன்றைக்கு கூவத்தூர் கோல்டன் ரிசார்ட் என்றால் ஒட்டுமொத்த தமிழகத்திற்கே தெரிந்த இடமாகிவிட்டது. அதில் தான் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு ஆதரவு தரும் அத்தனை எம்.எல்.ஏ க்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து அப்படி சிறை போன்று வைக்கப்பட்டு இருக்கும் எம்.எல்.ஏ க்களை விடுவிக்கும் படி எல்லா ஊடகங்களிலும் செய்திகள் வருகின்றன. ஆனால், அவர்கள் ஆட்சி அமைக்க ஆளுநர் கூப்பிடும் வரை இதே நிலை தான் தொடரும் போல.
இந்த சூழலில், உதயநிதி சும்மா இல்லாமல், தமிழக முதல்வரும், தனியார் விடுதியும் என்று ஒரு பதிவை போட்டு தமிழ் பட டைட்டில் என்று சொல்லியிருந்தார். அவ்வளவுதான், உங்க அப்பாவும், பாத்திமா பாபும் என்று ஆரம்பித்து, நெட்டிசன்கள் ஆதரவு, எதிர் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
ஆதரவை விட எதிர்ப்பு பதிவுகள் தான் அதிகம்.