தமிழக அரசியலில் நாளுக்கு நாள் பரபரப்பு அதிகமாகிக் கொண்டு செல்கிறது. நிமிடத்திற்கு, நிமிடம் சம்பந்தப்பட்ட அரசியல் வாதிகளுக்கு உயா் ரத்த அழுத்த நோய் வந்துவிடுமோ என்கிற பயம் வரும் நிலையில் உள்ளது.
உச்ச நீதி மன்றத்தில் உள்ள வழக்கு நாளையோ அல்லது நாளை மறுதினமோ பெஞ்ச் நீதிபதிகள் அமித்வராய், பி.சி.கோஷ் ஆகிய இருவரால் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
இரண்டு நீதிபதிகளில் ஒருவா் குற்றவாளி என்று கூறினாலும், சசி தண்டனையில் இருந்து தப்ப முடியாது.
ஒருவேளை மீண்டும் கா்நாடக உயா்நீதி மன்றம் வழக்கை விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டாலும், குமரசாமியின் தீர்ப்பு தவறானது என்று உறுதியாகிவிடும். அப்போதும் சசிகலா குற்றவாளிதான்.
இந்த நிலையில் தான் தப்பமுடியாது என்பதை முழுமையாக உணா்ந்துவிட்டார் சசிகலா.
அப்படியானால் யாரையாவது ஒருவரை முதல்வராக்கி பின்னா் தான் சுத்தமானவர் என நிருபித்துவிட்டு முதல்வர் பதவியை ஏற்கலாம் என்கிற எண்ணமும் சசிகலாவிடம் உள்ளதாம்.
இதில் தம்பித்துரை, எடபாடிப்பழனிச்சாமி, செங்கோட்டையன் ஆகிய 3 பேரில் ஒருவரை முதல்வராக்கலாம் என்று திட்டம் வகுத்தாராம்.
அதற்குள் குடும்ப உறுப்பினா்கள் ஏற்கனவே ஒரு முறை நல்லவர் என்று நம்பி முதல்வர் பொறுப்பை ஒப்படைத்தோம்.
ஆனால் பன்னீர் செல்வம் நமக்கே ஆப்பு அடித்து வருகிறார். மீண்டும் அப்படி செய்தால் ஏன் இவா்களும் அப்படி மாற மாட்டா்கள் என்று உறுதி கூறமுடியுமா ?
நமது குடும்பத்தில் ஒருவரை முதல்வராக நியமிக்கலாம் என்று ஐடியா கொடுத்துள்ளனா்.
இதில் மன்னார்குடி குடும்பத்தில் தனக்குதான் தரவேண்டும் என்று திவாகரனும், தனக்குதான் தரவேண்டும் என்று தினகரனும் சண்டையிட்டனா்.
இதைப்பார்த்த சசிகலா சும்மா இருக்க போறீங்களா இல்லை, நான் எதாவது செய்துக்கிட்டுமா என்று மிரட்டி இருவரையும் சமாதானம் செய்து வைத்தாராம்.
இதனால் கார்டனில் உள்ள அனைவரும் மிகவும் இறுக்கமாக உள்ளனா் என்று கார்டன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.