Loading...
இலங்கை பிரஜைகளுக்கு வீசா வழங்கும் விதிமுறையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை பிரஜைகள் வீசா அனுமதியின்றி அமெரிக்காவுக்கு செல்ல ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அனுமதி வழங்கியுள்ளதாக வெளிவான செய்திகளில் உண்மையில்லை என அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Loading...
இலங்கை பிரஜைகள் வீசா அனுமதியின்றி அமெரிக்காவுக்குள் செல்ல அனுமதி வழங்கி ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவொன்றில் கையெழுத்திட்டுள்ளதாக இணையத்தளங்கள் மற்றும் இணைய ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.
இதன் காரணமாக அமெரிக்க தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தமது நாட்டின் நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.
Loading...