- இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள், புரதம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது.
- உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்க உதவும்.
சர்க்கரை நோயாளிகள் பொதுவாகவே அரிசி உணவுகள் மோசமானவை என்ற எண்ணத்தை கொண்டுள்ளார்கள். ஆனால் எல்லா வகை அரிசியும் மோசமானவை அல்ல. கருப்பு அரிசி, டைப்-2 நீரிழிவு நோயாளிகளின் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு அரிசி ஆரோக்கியமானதாக அறியப்படுகிறது. இது நார்ச்சத்து மிகுந்தவை என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. நார்ச்சத்து மிகுந்துள்ள இது ரத்தத்தில் குளுக்கோஸை மெதுவாக வெளியிட உதவுகிறது. கருப்பு அரிசி மற்ற ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.
இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள், புரதம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்களுடன் அரிசியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன.
சர்க்கரை நோயாளிகள் கருப்பு அரிசியை எடுத்துவருவதன் மூலம் எடை இழப்பை சாத்தியமாக்கலாம். இது அதிக அளவு நார்ச்சத்து நிறைந்தது என்பதால் எடை இழப்பை உறுதி செய்கிறது. கருப்பு அரிசி முழு தானியங்கள் மற்றும் அவற்றின் தவிடு மற்றும் எண்டோஸ்பெர்ம் அப்படியே இருப்பதால் உடலால் மெதுவாக கிரகிக்கப்படுகிறது. இது உடல் பருமனை எதிர்த்துபோராட உதவுகிறது. கருப்பு அரிசி இதயத்துக்கு இதம் அளிக்கும்.
குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் இதய ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவர்கள் கருப்பு அரிசியை உட்கொள்வது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்க உதவும். இதயத்தை சரியாக இயங்க வைக்க செய்கிறது. சர்க்கரை நோயாளி கருப்பு அரிசியை சேர்ப்பது பாதுகாப்பானது என்றாலும் சரியான அளவை அறிய ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் டாக்டர்கள் ஆலோசனைகளை பின்பற்றித்தான் சாப்பிட வேண்டும். அதோடு சர்க்கரை நோயாளிகள் நார்ச்சத்து உணவுகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் உடல் செயல்பாடுகளிலும் ஈடுபட்டால் மட்டுமே சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்க முடியும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.