மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படம் வெளியான 3 நாட்களில் பல கோடி வசூல் குவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரகாஷ் ராஜ், பிரபு, ஆர்.சரத்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த படம் பொன்னியின் செல்வன்.
இப்படத்தின் முதல் பாகம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் 230 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. முன்பதிவு செய்யப்பட்ட நாட்களையும் தாண்டி இந்த படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு இருக்கும் என்பதால் எதிராபாராத அளவுக்கு வசூலை எட்டும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.