எதையும் நல்லதாகவே ஏற்றுக் கொள்வேன் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
கூவத்தூரில் அவர் திங்கட்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:-
அனைத்தும் நல்லவிதமாக போய்க் கொண்டு இருக்கிறது. எம்எல்ஏக்களை சந்தித்து பேசினேன். நல்லபடியாக, சந்தோஷமாக இருக்கிறார்கள்.
கேள்வி: இன்றைக்கு (திங்கட்கிழமை) ஏன் இங்கேயே தங்குகிறீர்கள்?
பதில்: எல்லோரும் கேட்டார்கள். சரி என்றேன்.
கேள்வி: எம்எல்ஏக்களின் மனஉணர்வு எப்படி இருக்கிறது?
பதில்: நன்றாக இருக்கிறது.
கேள்வி: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: எதையும் நல்லதாக ஏற்றுக் கொள்வேன்.
கேள்வி: ஓ.பி.எஸ். வழக்கமான பணிகளைத் தொடங்கியுள்ளாரே?
பதில்: எப்படி பணிகளைத் தொடர முடியும். ஆளுநர் என்ன சொல்லியிருக்கிறார். அவர் வேறு ஒன்றும் தனியாகச் செயல்பட முடியாது. அடுத்த ஆட்சி அமையும் வரை பொறுப்பு முதல்வராகவே இருக்க முடியும். என்ன செய்யலாம் என்றால், சட்டம்-ஒழுங்கை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என அதிகாரிகளுக்கு ஆலோசனை சொல்ல முடியும். அதற்கு மேல் வேறு ஒன்றும் செய்ய முடியாது.அதிமுக ஆட்சி அமையும். எப்படியும் இந்த அரசாங்கத்தை நடத்துவோம்.