மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதில் அருண்மொழி வர்மன் என்ற கதாப்பாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார்.
கல்கி எழுதிய நாவலை தழுவி, மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்-1’ திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியானது.
இந்நிலையில் இப்படத்தில் அருண்மொழி வர்மன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த ஜெயம் ரவியை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். இதுகுறித்து ஜெயம் ரவி பதிவிட்டது, அந்த 1 நிமிட உரையாடல் எனது நாளை, எனது இந்த வருடத்தை என் வாழ்க்கைக்கு ஒரு புதிய அர்த்தத்தை சேர்த்தது. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் குழந்தைத்தனமான உற்சாகத்திற்கும் நன்றி தலைவா. நீங்கள் திரைப்படத்தையும் எனது நடிப்பையும் விரும்பினீர்கள் என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியும் ஆசீர்வாதமும் அடைகிறேன் என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.