மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துள்ள படம் காட்ஃபாதர்.
திரையரங்குகளில் நேற்று வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘லூசிபர்’. இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்துள்ளனர். இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடித்துள்ளார். தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற பல படங்களை இயக்கிய மோகன் ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்கியிருந்தார்.
இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கதாப்பாத்திரத்தில் சல்மான் கான் நடித்திருக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, சத்யதேவ், சுனில், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ மற்றும் ‘என்.வி.ஆர் ஃபிலிம்ஸ்’ இணைந்து இப்படத்தை தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் ‘லூசிபர்’ படம் நேற்று (அக்டோபர் 5-ஆம்) தேதி திரையரங்குகளில் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. பொதுவாக ரீமேக் படங்கள் அந்த மொழிக்கு ஏற்றாற்போல் மாற்றம் செய்யப்படும் போது சில சறுக்கல்களை சந்திக்கும் ஆனால் இப்படத்தில் மோகன் ராஜாவின் ரீமேக் சூட்சமத்தால் சிரஞ்சீவி ரசிகர்கள் கொண்டாடும் வகையிலும் பார்வையாளர்கள் ரசிக்கும் படியும் படத்தை எடுத்துள்ளார் என்று தெலுங்கு திரையுலகினர் தெரிவித்துள்ளனர். மேலும் இயக்குனர் மோகன் ராஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது