Loading...
- குழந்தைகளுக்கு பர்ஃபி என்றால் மிகவும் பிடிக்கும்.
- இன்று பிஸ்தா பர்ஃபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பிஸ்தா பருப்பு (உப்பில்லாதது) – 1 டம்ளர்
சர்க்கரை – 2 1/2 டம்ளர்
நெய் – 1/4 டம்ளர்
நீர் – 3/4 டம்ளர்
ஏலக்காய்த்தூள் – 1/2 தேக்கரண்டி
Loading...
செய்முறை:
ஒரு வாணலியில் நெய்யை விட்டுப் பிஸ்தா பருப்புகளை ஓரிரு நிமிடங்களுக்கு வதக்கவும். ஆற வைத்துப் பிஸ்தாவை மிக்சியில் போட்டு தண்ணீர் விட்டு அரைக்கவும்.
சர்க்கரையைக் கொடுக்கப்பட்டுள்ள தண்ணீரின் அளவைப் பயன்படுத்திப் பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
பாகில் அரைத்தப் பிஸ்தாக் கலவையைக் கொட்டிக் கிளறவும். அடிக்கடி சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும்.
ஒட்டாமல் கெட்டியான பதம் வந்ததும் ஏலக்காய்த்தூளைக் கலந்து நெய்யை விட்டுக் கிளறி வேறு நெய் தடவிய தட்டிற்கு மாற்றி ஆற விட்டு வில்லைகள் போடவும்.
சுவையான பிஸ்தா பர்ஃபி தயார்.
Loading...