கச்சா எண்ணெய் கப்பல்
கடந்த 23ஆம் திகதி இலங்கை கடற்பரப்பிற்கு வந்த கச்சா எண்ணெய் கப்பலொன்று 13 நாட்களாக கடலில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தாமதக் கட்டணமாக நாளொன்றுக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் டொலர்களை செலுத்த வேண்டியுள்ளதாகவும் எரிபொருள், மின்சாரம் மற்றும் நீர் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித இது தொடர்பாக கூறுகையில், இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை இலங்கைக்கு வந்து தாமதமாக செலுத்த வேண்டிய கச்சா எண்ணெய் கப்பல்களுக்கு நாளொன்றுக்கு ஒரு இலட்சத்து இருபதாயிரம் டொலர்கள் செலுத்தப்பட்டதாகவும் ஆனால் இந்த கப்பல் 23 ஆம் திகதி வந்த நிலையில் அதற்கு தாமதக் கட்டணமாக நாளொன்றுக்கு தலா ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் டொலர்கள் செலுத்த வேண்டி உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதிகரித்த தாமத கட்டணம்
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு நாள் ஒன்றுக்கு இருபத்தைந்தாயிரம் டொலர்கள் தாமதக் கட்டணமாகச் செலுத்தப்பட்டு வந்ததாகவும், தற்போது தினசரி தாமதக் கட்டணம் அதிகரித்துள்ளமை குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஓமன் மார்பன் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ஏற்றது என்றும், இதன் காரணமாக இந்த கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யுமாறு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில், ரஷ்ய கச்சா எண்ணெயை கொண்டு வந்துள்ளதாகவும் ஆனந்த பாலித தெரிவித்தார்.
முன்னதாக ரஷ்ய யூரல்களில் இருந்து கச்சா எண்ணெய் வந்ததாகவும், அந்த கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதில் அதிக எரிபொருள் எண்ணெய் கிடைத்து வருவதாகவும்,ஆனால் எரிபொருளும் தரமற்றதாக மாறிவிட்டது என்றும் அவர் கூறினார்.
எரிபொருளின் தரம்
இதன் காரணமாக எரிபொருளின் தரத்தை அடைவதற்கு சுப்பர் டீசலை கலக்க வேண்டியுள்ளதாகவும், 80 ஒக்டேன் ரக பெற்றோல் உற்பத்தி செய்யப்படுவதால், ஒக்டேன் பெறுமதி 92 ஆக 95 ஒக்டேன் பெற்றோலைக் கலக்க வேண்டியுள்ளதாகவும் ஆனந்த பாலித தெரிவித்தார்.
ஒரு பீப்பாய் மார்பன் கச்சா எண்ணெயை 90 டொலர்களுக்கு கொள்வனவு செய்ய முடியும் எனவும், ஆனால் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு அதிக டொலர்களை செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு அவர் மேலும் கூறினார்.