Loading...
நாட்டில் சிறிய ரக மீன் வகைகளின் விலைகளில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. பெஹலியகொட மீன் விற்பனை மத்திய நிலையம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதிகளவில் மீன்கள் கிடைக்கப் பெறுவதனால் இவ்வாறு விலை வீழ்ச்சியடைந்துள்ளது என நிலையத்தின் தலைவர் ஜயந்த விக்ரமராச்சி தெரிவித்துள்ளார்.
Loading...
மண்ணெண்ணைக்கு வரையறை
இதேவேளை, மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணை அளவு வரையறுக்கப்பட்டுள்ளதாக மீன்பிடித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஒரே தடவையில் மண்ணெண்ணை விநியோகம் செய்யப்பட்டது எனவும், எதிர்வரும் காலங்களில் 3 அல்லது 4 நாட்களுக்கு ஒரு தடவையே மண்ணெண்ணை விநியோகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Loading...