முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு மிகப்பெரிய பிறந்த நாள் பரிசு ஒன்று காத்திருப்பதாக அரசியல்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் மாதம் 18ஆம் திகதியன்று மகிந்த ராஜபக்ஷ தனது பிறந்த நாளை கொண்டாட தயாராகி வருகின்றார்.
பிறந்த நாள் பரிசு
அதற்கமைய, அந்த நாளில் பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்ஷவிற்கு பிறந்தநாள் விசேட பரிசை வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்றைய தினம் அவருக்கு பிரதமர் பதவி மீண்டும் பரிசாக வழங்கப்படவுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் பதவி
அதற்காக பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடனான கடிதத்தை தயார் செய்ய பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் தயாராகவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமகால பிரதமர் தினேஷ் குணவர்த்தன தனது பதவியை விட்டுக் கொடுக்க இணக்கம் வெளியிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.