பதக்கப் பட்டியலில் சர்வீசஸ் அணி தொடர்ந்து முதலிடம்.
22 தங்கம் பதக்கங்களுடன் தமிழகத்திற்கு 5வது இடம்.
36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் 6 நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் ஃப்ரீஸ்டைலில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒலிம்பிக் வீரர் ஸ்ரீஹரி நடராஜ் தங்கப் பதக்கம் வென்றார். இது அவர் வெல்லும் ஆறாவது தங்கப்பதக்கம் ஆகும். 50.41 வினாடிகளில் இலக்கை அடைந்த அவர் புதிய தேசிய சாதனையை படைத்தார்.
தேசிய விளையாட்டுப் போட்டி பதக்கப் பட்டியலில், சர்வீசஸ் அணி இதுவரை தங்கத்தை 45 தங்கம், 31 வெள்ளி, 28 வெண்கல பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. 30 தங்கம், 25 வெள்ளி, 28 வெண்கலம் உள்பட அரியானா இரண்டாவது இடத்திலும், 28 தங்கம், 28 வெள்ளி, 54 வெண்கல பதக்கத்துடன் மகாராஷ்டிரா மூன்றாவது இடத்திலும் நீடிக்கின்றன. தமிழகம் 22 தங்கம், 21 வெள்ளி, 22 வெண்கலப் பதக்களுடன் 5 இடத்தில் உள்ளது.