பிஎஸ்என்எல் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
இந்தியாவில் விரைவில் 4ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் பிஎஸ்என்எல் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் இந்திய சந்தையில் 4ஜி சேவைகளை வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதுதவிர 2023 வாக்கில் 5ஜி சேவைகளை வெளியிட ஆயத்தமாகி வருகிறது. முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ அடுத்த தலைமுறை டெலிகாம் சேவைகளை தேர்வு செய்யப்பட்ட சில நகரங்களில் வழங்க துவங்கி உள்ளன. இதனிடையே பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 269 மற்றும் ரூ. 769 விலையில் பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
புதிய பிஎஸ்என்எல் பிரீபெயிட் சலுகைகள் 30 நாட்கள் மற்றும் 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகின்றன. மேலும், இவை அதிக டேட்டா பயன்படுத்துவோருக்கு ஏற்ற வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரூ. 269 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த சலுகை மொத்தத்தில் 60 ஜிபி டேட்டா வழங்குகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் ரூ. 269 சலுகையில் பிஎஸ்என்எல் டியூன்ஸ் வசதி வங்கப்படுகிறது. இத்துடன் இரோஸ் நௌ எண்டர்டெயின்மெண்ட், ஹார்டி மொபைல் கேம் சேவை, சாலஞ்சஸ் அரீனா கேம்ஸ், லிஸ்டின் பாட்காஸ்ட் சேவை, லாக்டுன் மற்றும் சிங் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.
பிஎஸ்என்எல் ரூ. 769 சலுகையிலும் ரூ. 269 சலுகையில் கிடைக்கும் பலன்களே வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் மொத்தம் 180 ஜிபி டேட்டா கிடைக்கும். இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ், பிஎஸ்என்எல் டியூன்ஸ், சிங், இரோஸ் நௌ எண்டர்டெயின்மெண்ட் என ரூ. 269 சலுகையில் வழங்கப்பட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன.