திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கடந்த ஜுலை மாதம் 21-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் மண்டலபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோவிலுக்கு 19 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கடந்த ஜுலை மாதம் 21-ம் தேதி மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து 48 நாட்கள் மண்டலபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிலையில், மண்டலபிஷேகம் நிறைவு விழாவான இன்று காலை கலசபிஷேகம், 108 சங்காபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றது. இரவு மயில் வாகனத்தில் சுவாமி திரு மீது உலா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் லட்சுமணன், உதவி ஆணையர் சித்ரா தேவி, செயல் அலுவலர் செந்தில்குமார், எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.