ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய ஐபோன் SE மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய ஐபோன் SE மாடல் எல்சிடி ஸ்கிரீன் மற்றும் நாட்ச் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
டிஸ்ப்ளே செயின் கன்சல்டண்ட்ஸ் (DSCC) ஆய்வாளர் ராஸ் யங் வெளியிட்டு இருக்கும் புது தகவல்களில் நான்காம் தலைமுறை ஐபோன் SE மாடலில் 6.1 இன்ச் எல்சிடி ஸ்கிரீன் மற்றும் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரிவித்து இருக்கிறார். இதே தகவலை தனியார் வலைதளத்துக்கு அளித்த பேட்டியில் ராஸ் யங் தெரிவித்துள்ளார்.
புதிய ஐபோன் SE மாடலில் 5.7 முதல் 6.1 இன்ச் எல்சிடி ஸ்கிரீன் மற்றும் ஹோல் வடிவ நாட்ச் வழங்கப்படும் என தெரிவித்து இருக்கிறார். இந்த மாடல் 2024 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். 2024 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் போது டைனமிக் ஐலேண்ட் அம்சம் அப்போது அறிமுகம் செய்யப்படும் அனைத்து ஐபோன்களிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
அந்த வகையில் இந்த அம்சங்கள் நான்காம் தலைமுறை ஐபோன் SE மாடலில் வழங்கப்படலாம். இத்துடன் 2024 வாக்கில் அறிமுகமாகும் ஐபோன்களில் யுஎஸ்பி டைப் சி ரக சார்ஜர்கள் வழங்கப்பட வேண்டும் என ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தி இருக்கிறது. இதன் காரணமாக ஐபோன் SE 4 மாடலில் யுஎஸ்பி சி போர்ட் வழங்கப்படலாம்.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஐபோன் SE 4 மாடலில் 6.1 இன்ச் நாட்ச் டிஸ்ப்ளே, ஃபேஸ் ஐடி, டச் ஐடி ஹோம் பட்டன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதே தகவலை மைடிரைவர்ஸ் மற்றும் ஆப்பிள் வல்லுனரான மிங் சி கியோ சார்பிலும் தெரிவிக்கப்பட்டன. ஐபோன் SE சீரிஸ் டிசைன் பழைய ஐபோன்களை தழுவியே உருவாக்கப்பட்டு வருகின்றன.