தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘ப்ரின்ஸ்’.
இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘ப்ரின்ஸ்’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார்.
பிரின்ஸ்
மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
பிரின்ஸ்
இதில் நடிகர் சத்தியராஜ் ஒவ்வொரு சிவகார்த்திகேயன் ரசிகர்களும் ஆசைப்படும் பரிசை அவர்கள் சார்பாக சிவகார்த்திகேயனுக்கு நான் கொடுக்கிறேன் என்று கூறி முத்தம் ஒன்றை கொடுத்தார். மேலும், பணம் காசு எல்லாம் பெரிது இல்லை. நீங்கள் கோடிக்கணக்கில் சிவகார்த்திகேயனுக்கு பரிசு கொடுத்தாலும் அவருக்கு சந்தோஷம் இருக்காது. ஆனால் அன்பாக நீங்கள் கொடுக்கும் ஒரு முத்தம் அவருக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்று கூறினார்.