சென்னை, சேலத்தில் கிரிக்கெட் அகாடமிகள் செயல்பட்டு வருகின்றன.
ஒசூர் அகாடமி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சார்பில் சென்னை துரைப்பாக்கம், சேலம் வாழப்பாடியில் கடந்த ஏப்ரல் மாதம் கிரிக்கெட் பயிற்சி அகாடமிகள் தொடங்கப்பட்டன. இளம் வீரர்கள் இதில் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் எம்.எஸ்.தோனி குளோபல் பள்ளியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமி அமைக்கப்படுகிறது.
இதற்கான தொடக்க விழா நேற்று நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இங்குள்ள மைதானத்தில் மொத்தம் 8 ஆடுகளங்கள் உருவாக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த பயிற்சி முகாம் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.