Loading...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது.
Loading...
ஊவா, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீட்டர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறுவுறுத்தப்பட்டுள்ளனர்.
Loading...