தீர்ப்பு வேறு தீர்வு வேறு. நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும் என உலக நாயகன் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் தமிழக அரசியல் குழப்பங்களை உன்னிப்பாக கவனித்து அவ்வப்போது தனது கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் உலகநாயகன் கமல்ஹாசன் பதிவிட்டு வருகிறார்.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மீதான தீர்ப்பு நாளை காலை வெளியாகவுள்ள நிலையில், கமல்ஹாசன் இதுபோன்றதொரு பதிவை டுவீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Verdict and solution are different; Righteousness should be contained in justice: Kamalhaasan
இன்று தீர்ப்பு வந்ததை அடுத்து கமல் தனது டுவிட்டர் பக்கத்தில், கள்வர்கள் சிறை சென்றதை தீபாவளியென கொண்டாடு என்று தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் இந்த விசயம் பரவ கமலுக்கு பாராட்டுகள் குவிகிறது.