மேலும் `போகன் ஹேரி தெரி’ என்ற பாலிவுட் படத்திலும், 3 மொழிகளில் உருவாகி வரும் `சாபாஷ் நாயுடு’ படத்தில் தந்தை கமலுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஜெயம் ரவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள `சங்கமித்ரா’ படத்தில் ஸ்ருதி ஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. வரலாற்றுக் கதையில் உருவாகவுள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்க உள்ளது.
முன்னதாக ஆர்யா, ஜெயம் ரவிக்கு ஜோடியாக பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான தீபிகா படுகோனே, சோனாக்ஷி சின்ஹாவை நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்ததாக கூறப்பட்ட நிலையில், ஸ்ருதி ஹாசனை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
உலகின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் எடுக்கப்பட உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு 2017 பிற்பாதியில் தொடங்க உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். `பஜ்ரோ மஸ்தானி’ பட புகழ் சுதீப் சட்டர்ஜி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.