மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படம் அமெரிக்காவில் வசூலில் சாதனை செய்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அமெரிக்காவில் இதுவரைக்கும் தமிழ் படங்கள் வசூலில் செய்த சாதனையை பொன்னியின் செல்வன் முறியடித்திருக்கிறது.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் திரையிட்ட இடங்களில் ரசிகர்கள் உணர்ச்சிவயப்பட்டு படத்தை ரசித்து வருகிறார்கள். இதே போல தென்கொரியாவில் தமிழ் மொழியிலேயே இப்படம் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. இங்கு ஒரு திரையரங்கில் படத்தை திரையிடுவதற்கு முன்பாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் இடம்பெற்ற “பொன்னி நதி பார்க்கணுமே” என்ற பாடலை ஒலிக்க விட்டு அதை தென்கொரியாவின் ரசிகர்களும் சேர்ந்து பாடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொன்னியின் செல்வன் நாவல் உலகில் உள்ள அனைவரையும் தமிழ் என்ற புள்ளியில் இணைத்திருப்பதோடு ராஜ ராஜ சோழனின் பெருமையை உலகறிய செய்திருக்கிறது என்கிறார்கள் தமிழ் ஆர்வலர்கள்.