தற்போதைய அரசாங்கம் மீது மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவது மிகவும் அவசியமானது என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஸ்திரத்தன்மை இல்லாமல் இலங்கையால் எந்தவொரு நீண்ட கால நோக்கத்தையும் அடைய முடியாது எனவும் அவ் சுட்டிக்காட்டியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நீண்ட கால நோக்கத்தையும் நாம் அடைய முடியாது
“அரசியல் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் நாங்கள் பணியாற்றும்போது, தற்போதுள்ள அரசாங்கம், அதன் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் மீது மக்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்ப்பது மிகவும் முக்கியமானது.
ஸ்திரத்தன்மை இல்லாமல் எந்த ஒரு நீண்ட கால நோக்கத்தையும் நாம் அடைய முடியாது.” என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது சரியான பாதையில் செல்வதாகவும், அவருடன் இணைந்து செயற்படுவதாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முழுமையாக ஆதரவளிக்கும் என முன்னாள் பிரதமர் மேலும் தெரிவித்திருந்தார்.