சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
இந்திய சந்தையில் சியோமியின் ரெட்மி நோட் சீரிஸ் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன்கள் ஆகும்.
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்களில் மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இது மிட்-ரேன்ஜ் 5ஜி பிராசஸர் ஆகும். ரெட்மி நோட் 12 சீரிசில் ஒரு மாடல் இந்த பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ரெட்மி பிராண்டின் பொது மேலாளர் லுன் வெய்பிங் ரெட்மி நோட் 12 சீரிஸ் வெளியீட்டை உணர்த்தும் டீசரை வெய்போவில் பகிர்ந்து இருக்கிறார். இந்த ஆண்டு இரண்டு ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். இவற்றில் முதல் சீரிஸ் அதிக திறன் கொண்டதாகவும், மற்றொரு சீரிஸ் அனைத்து பிரிவினருக்கும் ஏற்ற வகையில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
ரெட்மி நோட் 10 ப்ரோவுடன் ஒப்பிடும் போது ரெட்மி நோட் 12 சீரிஸ் அதிக பெர்பார்மன்ஸ் கொண்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதிக அம்சங்கள் மட்டுமின்றி ரெட்மி நோட் சீரிஸ் விலை எப்போதும் போல் குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். தற்போதைய தகவல்களின் படி எண்ட்ரி லெவல் ரெட்மி நோட் 12 சீரிஸ் விலை ரூ. 12 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் கிடைக்கும் என தெரிகிறது.
மேலும் புதிய ரெட்மி நோட் 12 சீரிஸ் குறைந்த விலையில் கிடைக்கும் ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன் என்ற பெருமையை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். இம்மாத இறுதியில் ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. ரெட்மி நோட் 12 சீரிசின் டாப் எண்ட் மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. இந்தியாவில் ரெட்மி நோட் 12 சீரிஸ் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம்.