கடுவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் பத்து வயது சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்த 29 வயதுடைய மாற்றாந்தாய் ஒருவரை கடுவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தனது மாற்றாந்தாய் சித்திரவதை செய்தமை தொடர்பில் வகுப்பு ஆசிரியையிடம் கூறியதையடுத்து அதிபர் கடுவெல பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொத்தலாவல பிரதேசத்தை சேர்ந்த இந்த சிறுமி, தனது மாற்றாந்தாய் தன்னை அடிப்பதாக பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் உடலில் பல இடங்களில் தழும்புகள்
தன் மீது மிளகாய், மிளகாய்த்தண்ணீர் ஊற்றி உதைப்பதாகவும், வீட்டில் பாத்திரம் கழுவுவது முதல் அனைத்து வேலைகளையும் தான் செய்து வருவேன் என்றும் காவல் துறையிடம் கூறியுள்ளார்.
இவரது தாய் இவரை விட்டு பிரிந்து சென்றுள்ள நிலையில் தந்தையின் இரண்டாவது மனைவி நீண்ட நாட்களாக சிறுமியை சித்ரவதை செய்து வந்துள்ளார். சிறுமியின் உடலில் பல இடங்களில் தாக்குதல்களால் ஏற்பட்ட தழும்புகளையும் பொலிஸார் அவதானித்துள்ளனர்.
சந்தேகநபர் கடுவெல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறுமி சிகிச்சைக்காக முல்லேரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடுவெல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ஏனைய அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.