நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்புக்கு பின்னர் பல சர்ச்சைகள் கிளம்பி வருகிறது.
நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பே இருவரும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இவர்களின் அறிவிப்புக்கு பின்னர் இதுகுறித்து பல சர்ச்சைகள் கிளம்பி வருகிறது.
நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொடுத்த வாடகை தாய் யார்? என்பதை அவரும், அவரது கணவரும் ரகசியமாக வைத்து இருக்கிறார்கள். அந்த ரகசியம் மெதுவாக கசிந்து இருக்கிறது.
இந்நிலையில் நயன்தாராவுக்கு வாடகைத்தாயாக உதவியவர் கேரளாவை சேர்ந்த பெண் என்பது தெரியவந்துள்ளது. நயன்தாரா கேரள மாநிலம் திருவல்லாவில் கல்லூரி படிப்பை படித்துள்ளார். அவரது கல்லூரி தோழிகள் சிலர் உதவியுடன்தான் ஒரு பெண்ணை ஏற்பாடு செய்துள்ளார்கள் என்றும் அந்த பெண் நயன்தாராவின் பாதுகாப்பில் இருப்பதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
நயன்தாராவிடம் விசாரித்து பின்னர் வாடகை தாயான அந்த பெண்ணிடமும் விசாரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.