குருவுடன் ராகு சேர்ந்தால் வருமானம் சிறப்பாக இருக்கும்.
குருவுடன் சந்திரன் சேர்ந்தால் மிகவும் யோகமான பலன்கள் கிடைக்கும்.
குருவுடன் சூரியன் சேர்ந்தால் அரசாங்கத்தில் அதிகாரம் செய்யக்கூடிய பதவிகள் கிட்டும். செல்வாக்கைப் பயன்படுத்தி வாழ்க்கையில் பல வெற்றிகளை எளிதாகப் பெற முடியும். சில சாதனைகளைப் புரிந்து மற்றவர்களுடைய பாராட்டைப் பெறுவார்கள். மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும்.
குருவுடன் சந்திரன் சேர்ந்தால் மிகவும் யோகமான பலன்கள் கிடைக்கும். செல்வச் செழிப்பில் மிதப்பார்கள். ஏராளமான வருமானம் வரும். எவ்வளவு செலவு செய்தாலும் செல்வம் குறையாது. வாழ்க்கையில் மிகவும் வசதியாக வாழ்வார்கள். கவுரவப்பதவிகள் தேடி வரும். உற்சாகத்துடன் செயல்படுவார்கள்.
குருவுடன் செவ்வாய் சேர்ந்தால் மிகவும் அதிர்ஷ்டமான பலன்கள் கிடைக்கும். ஏராளமாகச் செல்வம் சேரும். வீடு, நிலம், பூமி, பொன்னாபரணங்கள் சேரும். வாகன வசதி உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் காணப்படும். தெய்வீகப்பணிகளில் சிறப்பாகச் செயலாற்றுவார்கள்.
குருவுடன் புதன் சேர்ந்தால் தொழில், வியாபாரத்தில் பல நெருக்கடிகள் தோன்றும். எதிர்பார்க்கும் லாபம் கிட்டாது. வருமானத்தை விடச் செலவு அதிகமாக இருக்கும். குடும்பத்தில் சண்டையும் சச்சரவுமாக இருக்கும். நினைப்பது போல் எதுவும் நடக்காது. பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாமல் திணற வேண்டியிருக்கும்.
குருவுடன் சுக்கிரன் சேர்ந்தால் அவர்கள் எதையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தாலும் அதை வெளிக்காட்டுவதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்காது. தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறுவது போல் தோன்றினாலும் லாபம் குறைவாகக் கிட்டும். செல்வாக்கு நன்றாக இருக்கும்.
குருவுடன் சனி சேர்ந்தால் தொழில், வியாபாரத்தில் தாராளமாக லாபம் கிட்டினாலும் பல சிக்கல்கள் தோன்றும். மனைவியாலும் உடன் பிறந்தவர்களாலும் பல பிரச்சினைகள் ஏற்படும். சொத்துகள் சம்பந்தமாக விவகாரங்களும் வழக்குகளும் ஏற்படும். கடுமையாகச் செயல் பட்டே எந்த வெற்றியையும் பெற முடியும்.
குருவுடன் ராகு சேர்ந்தால் வருமானம் சிறப்பாக இருக்கும். அசையா சொத்துகளும் பொன்னாபரணங்களும் சேரும். வாகன வசதி உண்டாகும். கவுரவப் பதவிகளும் உயர்பதவிகளும் தேடி வரும். விவாகரத்து பெற்ற பெண்கள், விதவைகள், நடிகைகள் போன்றோருடைய தொடர்பால் பல நன்மைகள் ஏற்படும். வளமான வாழ்க்கை அமையும்.
குருவுடன் கேது சேர்ந்தால் வருமானம் சிறப்பாக இருக்கும். அதிகாரம் செய்யக்கூடிய பதவிகள் கிட்டும். வெளிநாடுகளுக்குச் சென்று பணம் சம்பாதித்து வருவார்கள். வேறு மொழி பேசும் மனிதர்களால் பல பயனுள்ள நன்மைகள் ஏற்படும். செல்வ வசதிகள் நிறைந்த வாழ்க்கை அமையும்.