மீனாட்சி கோவில் பற்றி அறிந்து கொள்ள www.meenakshi temple.org என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது.
இணையதளம் திடீரென்று முடங்கியதாக தகவல் வெளியானது.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூர், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இவ்வாறு வருபவர்கள் கோவிலை பற்றி அறிந்து கொள்ள மீனாட்சி கோவில் நிர்வாகம் சார்பில் www.meenakshi temple.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் செயல்பட்டு வருகிறது.
அதில் கோவில் திருவிழாக்கள், கோவில் நடை திறக்கும் நேரங்கள், கோவிலின் வரலாறு, கோவிலின் சிறப்பு, சிறப்பு கட்டணம் மற்றும் ஆன்லைன் மூலம் பிரசாதம் வாங்குதல் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றிருந்தன. இந்த இணையதளம் நேற்று முன்தினம் முதல் திடீரென்று முடங்கியதாக தகவல் வெளியானது.இது குறித்து கோவில்துணை கமிஷனர் அருணாச்சலத்திடம் கேட்ட போது அது போன்று எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், எப்போதும் போல் இணையதளம் செயல்படுவதாக தெரிவித்தார்.