ஒரு நாள் போட்டி தர வரிசையில் விராட் கோலிக்கு சரிவு ஏற்பட்டு உள்ளது.
டி20 பந்து வீச்சை பொறுத்தவரை ‘டாப்10’ல் இந்திய வீரர்கள் யாரும் இல்லை.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 838 புள்ளிகளுடன் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் உள்ள பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானுக்கும் அவருக்கும் 15 புள்ளிகளே வித்தியாசம் இருக்கிறது. ரிஸ்வான் 853 புள்ளிகளுடன் இருக்கிறார்.
32 வயதான சூர்யகுமார் யாதவ் சமீபகாலமாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தென் ஆப்பிரிக்கா தொடரில் அவர்தான் அதிக ரன் குவித்து இருந்தார்.
‘டாப்10’ வரிசையில் இந்திய வீரர்களில் சூர்ய குமார் யாதவ் மட்டுமே இடம் பெற்றுள்ளார். லோகேஷ் ராகுல் 13-வது இடத்திலும் (606 புள்ளிகள்), முன்னாள் கேப்டன் விராட் கோலி 14-வது இடத்திலும் (605 புள்ளி), கேப்டன் ரோகித் சர்மா 16-வது இடத்திலும் (604 புள்ளி) உள்ளனர்.
பாபர் அசாம் (பாகிஸ்தான்) மார்க்ராம் (தென் ஆப்பிரிக்கா), கான்வாய் (நியூசிலாந்து), ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா), நிஷங்கா (இலங்கை), முகமது வாசிம் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்), குயின்டன் டி காக் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோர் 3 முதல் 10-வது இடங்களில் உள்ளனர்.
பந்து வீச்சை பொறுத்தவரை ‘டாப்10’ல் இந்திய வீரர்கள் யாரும் இல்லை. புவனேஸ்வர் குமார் 638 புள்ளிகளுடன் 13-வது இடத்தில் உள்ளார்.
ஹாசில்வுட் (ஆஸ்திரேலியா) 732 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். ரஷீத்கான் (ஆப்கானிஸ்தான்), 2-வது இடத்திலும், ஹசரங்கா (இலங்கை) 3-வது இடத்திலும் உள்ளனர்.
ஒரு நாள் போட்டி தர வரிசையில் விராட் கோலிக்கு சரிவு ஏற்பட்டு உள்ளது. 6-வது இடத்தில் இருந்து 7-வது இடத்துக்கு பின் தங்கி உள்ளார். அவர் 722 புள்ளிகளை பெற்று உள்ளார். கேப்டன் ரோகித் சர்மா 718 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளார்.
இந்த இருவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடவில்லை. தவான் 17-வது இடத்தில் உள்ளார்.
பாகிஸ்தானின் வீரர்களான பாபர் அசாம், இமாம்-உல் ஹக் முதல் 2 இடங்களில் உள்ளனர்.
பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 5 இடங்கள் முன்னேறி உள்ளார். 30-வது இடத்தில் இருந்து அவர் 25-வது இடத்துக்கு வந்து உள்ளார். பும்ரா தொடர்ந்து 10-வது இடத்தில் நீடிக்கிறார். யசுவேந்திர சாஹல் 20-வது இடத்தில் உள்ளார்.
டிரென்ட் போல்ட் (நியூசிலாந்து) ஹாசில்வுட் (ஆஸ்திரேலியா), முஜிபுர் ரகுமான் (ஆப்கானிஸ்தான்) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.