Loading...
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தந்தையால் 7 வயது மகள் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட நிலையில் சந்தேகநபரான தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணையில் சந்தேகநபர் மதுபோதைக்கு அடிமையானவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணையில் வெளியான தகவல்
5 நாட்களுக்கு முன்னர் அவர் தனது 7 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Loading...
அதற்கமைவாக பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் 30 வயதான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஆபாச காணொலிகளை வற்புறுத்தி காண்பித்தே அவர் வன்புணர்விற்கு முயற்சித்துள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...