தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொள்ள தமன்னா கேரளா சென்றார். அப்போது அவர் அளித்த பேட்டி…
“எனக்கு பிடித்த மலையாள நடிகர் மம்முட்டி. அவர் இத்தனை ஆண்டுகள் திரை உலகில் இருந்தாலும், இன்றுவரை இளம் ரசிகர்களை கவர்ந்து தன்னிடம் வைத்து இருக்கிறார். இது எனக்கு வியப்பை தருகிறது. மலைப்பாக இருக்கிறது.
65 வயதானாலும் மம்முட்டி இன்னும் இளமையாக இருக்கிறார். அவரை நேரில் பார்த்தால், ‘உங்களால் மட்டும் எப்படி சார் இன்னும் இளமையாக இருக்க முடிகிறது’ என்று நிச்சயம் கேட்பேன். எனக்கு துல்கர்சல்மான், நிவின் பாலி ஆகியோரையும் மிகவும் பிடிக்கும். விரைவில் மலையாள படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்.” என்று தெரிவித்தார்.